சூடான செய்திகள் 1

சர்வதேச நாணய நிதியத்தின் குழு பெப்ரவரியில் இலங்கைக்கு வருகை

(UTV|COLOMBO)-சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட்டை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்;

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், முற்போக்கான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கை தயாராக இருப்பதாகவும் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

Related posts

இலங்கைக்கு வெற்றியிலக்கு 267 ஓட்டங்கள்

ரவியின் வீட்டை படம்பிடித்த இருவர் கைது

தப்லீக் பணியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 08 இந்தோனேஷியர்களும் விடுதலை

editor