வணிகம்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி , பொதுமக்களை பணயமாக வைத்துக் கொள்வதல்ல – நிதியமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச நாணய நிதியத்தின் நிதி நாட்டை மேம்படுத்துவதற்கு உதவுமே தவிர, பொதுமக்களை பணயமாக வைத்துக் கொள்வதல்ல என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கு சர்வதேச அமைப்புக்களின் ஆலோசனைகள் தேவையற்றதாகும் என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு இறைவரி திணைக்கள பணியாளர் சங்கத்தின் 22வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிதி தொடர்பான ஒழுக்கம் சட்டவிதிகள் ஆகியன தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் உண்டு என்றும் அவர் கூறினார்.

Related posts

ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு முகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford

பில்ட் ஸ்ரீலங்கா 2017 கண்காட்சி

மணல் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்