உள்நாடு

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை

(UTV | கொழும்பு) – அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவோ அல்லது ஹர்ஷ டி சில்வா கூறுவது போல டொலர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளும் போது அரசாங்கம் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டிய நிலை வரும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை மூலமான வேலைத்திட்டத்திற்கு அது தடையாக அமையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க அவ்வாறான நிபந்தனைகளுக்கு உட்பட்டு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கு அரசாங்கம் தயாரில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்

editor

இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

2022 A/L மாணவர்களுக்கு 80% வருகை கணக்கில் எடுக்கப்படமாட்டாது