விளையாட்டு

சர்வதேச தரப்படுத்தலில், இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு 19வது இடம்

(UTV|COLOMBO)-இலங்கை வலைப்பந்தாட்ட அணி சர்வதேச தரப்படுத்தலில் 19வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. அணி பெற்றுள்ள புள்ளிகளின் எண்ணிக்கை 51 ஆகும். வெற்றிகரமான வருடத்திற்குப் பின்னர்இ இந்த அணிக்குஇ தரப்படுத்தலில் உயர்வான இடம் கிடைத்துள்ளது.

இந்த தரப்படுத்தல் பட்டியலில் ஆசிய நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் 25வது இடத்திலும்இ மலேசியா 27வது இடத்திலும்இ ஹொங்கொங் 28வது இடத்திலும் இடம்பெற்றுள்ன.

உலகக் கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தயாராக உள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணிஇ சர்வதேச தரப்படுத்தல் பட்டியலில் உயர்நிலைக்கு வர முடிந்தமை மனோரீதியில் வலுவை ஏற்படுத்தியுள்ளது. உலக தரப்படுத்தல் பட்டியலில் 19வது இடத்திற்கு தரமுயர்ந்தமையுடன் இலங்கை ஆசியாவில் முன்னணியில் உள்ள வலைப்பந்தாட்ட அணியாகத் திகழ்கிறது.

 

 

 

Related posts

T20 உலகக் கிண்ணத்திற்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று

அர்ஜுன தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழு – ரொஷான் ரணசிங்க