சூடான செய்திகள் 1

சர்வதேச சிறுவர் தினத்தில் தம்புள்ளை பகுதியில் பதிவாகிய சம்பவம்…

(UTV|COLOMBO)-சர்வதேச சிறுவர் தினத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்த பாடசாலை மாணவி மற்றும் மாணவர் தொடர்பான தகவல் தம்புள்ளை பகுதியில் பதிவாகியுள்ளது.

அவர்கள் இருவரும் நண்பர் ஒருவர் வீட்டில் தனியாக தங்கியிருந்த வேளை காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர் காவல்துறை பாதுகாப்பில் உள்ளார்.

15 வயதான மாணவியும் 18 வயதான மாணவனும் நீண்டகாலமாக காதலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் தம்புள்ளை நருக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு, காதல் தொடர்பில் பெற்றோருக்கு தெரிந்த நிலையில் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இதன் பின்னர் இருவரும் வீடுகளில் இருந்து வெளியேறி இவ்வாறு நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளனர்.

இதன்போது இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சர்வதேச சிறுவர் தினத்தில் இவர்கள் இருவரும் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவியளித்த தரப்பினரை தேடி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நிறுத்தக் கோரி விசேட பேரணி

இலங்கை மின்சார முச்சக்கர வண்டிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்திட்டம்

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன