உள்நாடு

“சர்வதேச சமூகம் விரும்பும் விதத்தில் நாங்கள் கைதிகள் பற்றி முடிவுகளை எடுப்பதில்லை”

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அல்லது ஏனைய சர்வதேச சக்திகள் கைதிகள் மீதான தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கையில் கைதிகள் விடுவிக்கப்படும் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு பிரச்சினை ஏற்படாது.

ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கவும், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள நீண்டகாலக் கைதிகளை விடுவிக்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கைதிகளை சுதந்திரமாக அவதானித்து ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

பயங்கரவாத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பல நாடுகள் இலங்கையை எதிர்ப்பதாகவும், அங்கு அரசுக்கு எதிராக எப்போதும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் வலியுறுத்தினார்.

Related posts

பிள்ளையானுக்கு கன்னி அமர்வில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி

பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாக எமது பயணம் அமையும்

புத்தளம் நகர சபையின் தலைவர் மரணம் : மூவர் கைது