சூடான செய்திகள் 1

சர்வதேச சமுத்திர மாநாடு இன்றும் நாளையும்

(UTV|COLOMBO)-2018 காலி கலந்துரையாடல்’ சர்வதேச சமுத்திர மாநாடு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்றும்(22) நாளையும்(23) இடம்பெறவுள்ளது.

பிரதம அதிதியாகப் பங்கேற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்ப உரையை நிகழ்த்த உள்ளார். 50 நாடுகள் மற்றும் 17 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சமுத்திரப் பாதுகாப்புத் துறைசார் நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும், இலங்கை கடற்படையும் இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன.

‘ஒத்துழைப்பின் மூலம் சமுத்திர முகாமைத்துவத்திற்காக ஒன்றிணைதல்’ என்பது இம்முறை மாநாட்டின் தொனிப்பொருளாகும் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எல்பிட்டிய தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நிறைவு

பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான தீர்மானம் நாளை

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது