சூடான செய்திகள் 1

சர்வதேச சந்தைவாய்ப்பை இலக்கு வைத்து இணைய முனையம் திறப்பு சிறிய நடுத்தர முன்னணி வர்த்தகர்களுக்கு பெரும் வாய்ப்பு!!!

(UTV|COLOMBO)-வியாபார வர்த்தக தகவல் இணைய முனையும் (SLTIP) இன்று  (20.07.2018) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச சந்தையின் வியாபார தகவல்களை உலகின் பல பாகங்களிலிருந்தும் திரட்டி வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பொருட்டு இலங்கை வர்த்தக திணைக்களம் இந்த இணைய முனையத்தை (SLTIP) ஆரம்பித்துள்ளது. நாடுகளுக்கிடையிலான பொருட்களின் விலைகள், ஏற்றுமதி இறக்குமதி வரிகள், சுங்கத்தீர்வைகள், வியாபார சட்ட, திட்டங்கள் சந்தையில் நுழைவதற்கான அனுமதியைப் பெறும் தகவல்கள் என்பவற்றை இந்த இணைய முனையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு இணையத்தின் மூலம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது இலங்கையின்  பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சி போக்கை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த இணைய முனையத்தை (SLTIP) திறந்ததன் மூலம் சர்வதேச வியாபார வர்த்தக வரலாற்றின் பாரிய அத்தியாயத்திற்குள் இலங்கை நுழைந்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். உலக வங்கி, இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின்; ஒத்துழைப்புடன் இயங்கவுள்ள இந்த இணைய முனையம் இலங்கையின் பாரம்பரிய வர்த்தக முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி சர்வதேச சந்தைப் போட்டிகளில் நிலவும் நவீன சவால்கள், தடைகளை தகர்த்து இலகுவாக சந்தைக்குள் நுழைவதற்கு   உதவும்.
உலகின் பல நாடுகளின் வர்த்தகத்துறையை மேம்படுத்துவதற்கு உதவும்.  இந்த இணைய முனையத் தளத்தில் இலங்கைக்கு முன்னர் இறுதியாக வியட்நாம், இணைந்து கொண்டது. தற்போது  இலங்கையும் இவ்விணையத்தை திறந்துள்ளதால், நாட்டின் வர்த்தகத்துறையில்  பாரிய மறுமலர்ச்சி ஏற்படவுள்ளது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உலக வங்கியின் சிரேஷ்ட வர்த்தக பிரமுகர் மார்க்கட் பார்லி ஜோன், இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் பிரைட் ஹட்சீசன் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சா,; நாட்டின் முன்னணி, நடுத்தர, சிறிய   வர்த்தகர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி நடைமுறைகள் நடவடிக்கைகள் குறித்து அறிந்து ஆராய்ந்து செயற்படுவதற்கு சிறந்த கருவியாக அமையும் என தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் வியாபாரம் முக்கிய வகிபாகத்தை கொண்டுள்ளதாக உலக வர்த்தக வங்கியின் பிரதிநிதி மார்க்கட் பார்லி குறிப்பிட்டார்.  இலங்கையின் மரபு ரீதியான வர்த்தக துறையில் மாற்றம் ஏற்படுத்துவதே இந்த இணையத்தின் நோக்கம் என்றும,; சரியான நேரத்தில் சரியான தகவல்கலூடாக  உள்ளுர் வர்த்தகத்தை விருத்தி செய்வது சர்வதேச சந்தைக்குள் நுழைவதற்கான சரியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவுஸ்ரேலிய இலங்கைக்கான தூதுவர் குறிப்பிட்டார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பம்

பூஜித் – ஹேமசிறி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

அரசுடன் இணைவதானது உண்மைக்கு புறம்பானது – ரிஷாத்