(UTV | கொழும்பு) –
காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் போரை நிறுத்த சர்வதேச அளவில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்ற கோரிக்கையை இஸ்ரேல் மறுத்துள்ளது.
ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
குறிப்பாக இதில் 4000 இற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், இஸ்ரேலிடம் போர் நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்தார். இது இஸ்ரேலின் எதிர்காலத்திற்கும் நல்லத்தில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්