அரசியல்உள்நாடுவிளையாட்டு

சர்வதேச கிரிக்கட் பேரவையின் மூத்த அதிகாரிகளை சந்தித்த பிரதமர் ஹரினி

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அண்மையில் சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி பேரவையினால் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுமதி தர்மவர்தன, CBE, QPM, சர்வதேச கிரிக்கட் பேரவையின் தரம் மற்றும் மனிதவளம் தொடர்பான பொது முகாமையாளர் அலெக்ஷ் மார்ஷல் உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் போது சுமதி தர்மவர்தனவின் புதிய நியமனத்திற்கு பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கை கிரிக்கட்டில் போட்டி சூதாட்டத்தை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் தற்போதைய நிலை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

கடந்த ஏழு வருடங்களில் கிரிக்கட் விளையாட்டில் ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கைப் பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றத்திற்கு எலெக்ஸ் அவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அத்துடன் விளையாட்டு வீரர்களின் கல்வியறிவு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணைகளை பலப்படுத்துவதன் தேவை தொடர்பிலும் அவர் வலியுறுத்தினார்.

குறித்த சந்திப்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவு செயற்பாடுகளின் சிரேஷ்ட முகாமையாளர் Andrew Ephgrave ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி விஜே பண்டார, விளையாட்டுத் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் இலுப்பெரும மற்றும் விளையாட்டுத் துறையின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஷெமால் பெர்னான்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

-பிரதமர் ஊடக பிரிவு

Related posts

வழக்கறிஞர் அங்கியை அணிந்து கொண்டு வழக்குகளை பிரதமர் விசாரிக்க வேண்டும் – தர்மரத்ன தேரர்.

பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 ஆம் ஆண்டாகும் போது பசுமை இலக்குகளை அடைந்துகொள்ள இலங்கை அர்ப்பணிக்கும்

முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்