விளையாட்டு

சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழு கூட்டம் இன்று…

(UTV|DUBAI) சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழு கூட்டம் இன்று ஆரம்பமாகிறது.இந்த கூட்டம் இன்று காலை டுபாயில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2ஆம் திகதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளின் நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது, எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கட் போட்டிகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 2028ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியை இணைத்து கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

கத்தார் FIFA அரங்கில் சாகிர் நாயகவின் மார்க்கப்பிரச்சாரம் செய்ய ஆயத்தம்!

T20 WorldCup : சூப்பர் 12 சுற்று இன்று ஆரம்பம்

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா