சூடான செய்திகள் 1

சர்வதேச காவற்துறையின் ஒத்துழைப்பை கோரிய போதைப் பொருள் ஒழிப்பு பணியகம்

(UTV|COLOMBO)-பேருவளை – பலப்பிட்டிய கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் சீசெல்ஸ் மற்றும் பங்களாதேஷில் வசிக்கும் சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்வதற்காக சர்வதேச காவற்துறையின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கு தேவையான தகவல்கள், சர்வதேச காவற்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த பணியகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகத்துக்குரியவரின் பேருவளையில் உள்ள வீட்டில் இருந்து செய்மதி தொலைபேசிகள் மற்றும் 59 லட்சம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

 

 

 

 

Related posts

“டீலா” என்று அழைக்கும் டக்லஸ் கைது

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை ஆணைக்குழு அங்கீகரிக்குமா? இன்று கூடி-முடிவு

(VIDEO) கிரேண்ட்பாஸ் பொலிஸ் பொதுமக்கள் பிரிவும் ,பதுள்ளவத்த பொலிஸ் மக்கள் சேவைப் பிரிவு மற்றும் பதுள்ளவத்த சர்வமத மக்களும் இணைந்து அன்னதான நிகழ்வு