உள்நாடு

சர்வதேசத்த்தினை நாட கர்தினால் ஆராய்வு

(UTV | கொழும்பு) – உயர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் தெரிவித்தார்.

எங்கள் மக்களிடமிருந்து எங்களுடைய மக்களுக்கு நீதி கிடைக்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம் எனவும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன எனவும் தெரிவித்தார்.

எனவே, சர்வதேசத்துக்கு செல்வதற்கான (அதுவும் ஐ.நா.வுக்குச் செல்வதைக் குறிக்கும்) சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்காக இலங்கையுடன் தொடர்பு வைத்திருக்கும் சக்தி வாய்ந்த நாடுகளையும் அணுகவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கத்தோலிக்க திருச்சபையானது உலகம் முழுவதும் தொடர்புகளைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும் என்று குறிப்பிட்ட அவர், கர்தினால் என்ற முறையில் தனது சக கர்தினால்களுடன் இந்த வழக்கை எடுத்துச் செல்லவுள்ளதாகவும் கூறினார்.

உள்நாட்டில் நீதி கிடைக்கும் என நம்புவதால் மேற்கூறிய நடவடிக்கைககளை தாம் எடுக்கவில்லை என்றும் எனினும் அது அவ்வாறு நடப்பதாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Related posts

இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லை

சமூக ஊடக தணிக்கை – மஹிந்த கருத்து.

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பிலான முக்கிய தீர்மானம்