அரசியல்உள்நாடு

சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் – டில்வின் சில்வா

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புடன் இலங்கையின் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதுடன், தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நாட்டு மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் முன்வைப்பது மாத்திரமன்றி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை மக்கள் அனுமதியுடன் நிறைவேற்றுவோம்.

ஆனால், புதிய அரசியலமைப்பை தயாரிப்பது என்பது சவால் மிக்கதொரு பணி என்பது எமக்கு தெரியும். எனினும் அதனை வெற்றிகரமாக செய்து முடிப்போம். அதே போன்று தேசிய மக்கள் சக்தியிக் தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்.

கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகவே ஐரோப்பாவில் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்கள் மீது ஒரு அரசின் அதிகாரத்தை (அரசியலமைப்பு கட்டுப்பாடுகள்) கட்டுப்படுத்தவும், சமத்துவத்துக்கான முழுமையான உத்தரவாதங்களை வழங்குவதன் மூலம் பெரும்பான்மையினரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கங்களே அவையாகும்.

எவ்வாறாயினும், இலங்கையில் நிறைவேற்றப்பட்ட 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் குறிப்பாக ஜனாதிபதி மற்றும் அரச இயந்திரத்தின் தன்னிச்சையான அதிகாரங்களை அதிகரித்ததன் மூலம் நேர்மறையான விடயங்களே இடம்பெற்றுள்ளன.

1972 மற்றும் 1978 அரசியலமைப்புகளில் அமைச்சர்களின் தன்னிச்சையான அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் திறப்பு

‘வெறும் பதவிகளுக்குப் பதிலாக பாராளுமன்றக் குழு அமைப்பின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’

அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட விசேட விமானம்