உள்நாடு

சர்வகட்சி மாநாட்டின் தொடக்கத்திலேயே ரணில் – கப்ரால் மோதல்

(UTV | கொழும்பு) –  நாட்டில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடி தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி மாநாடு சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமானது.

மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தரமான மற்றும் நிலையான தீர்வைக் காண்பதற்காக இந்த மாநாடு கூட்டப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, நிகழ்வில் கலந்து கொள்ளாத அரசியல் கட்சிகளை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

சர்வகட்சி மாநாட்டின் நோக்கம் குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் விளக்கமளித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி 2015ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது.

அந்த நேரத்தில் அரசாங்கம் நாட்டிற்கு சுமார் 15 பில்லியன் டாலர் கடனைக் காப்பாற்றுவதாகவும், இந்த பருவத்தில் வெளிநாட்டு கையிருப்பு சுமார் ஒரு பில்லியன் குறைந்துள்ளதாகவும் கூறியது.

அன்றைய காலப்பகுதியில் நாட்டின் அபிவிருத்தி குறிகாட்டிகளின் பெறுமதி குறைந்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட்-19 தொற்றினால் இலங்கைப் பொருளாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் வீழ்ச்சி ஆகியவற்றின் நீண்டகால விளைவுகள் பற்றி அவர் பின்னர் விவரித்தார்.

உக்ரைன்-ரஷ்யா நெருக்கடியால் இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் அவர் பேசினார்.

உரையின் இறுதியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கி ஆளுநரின் ஆரம்ப உரையை விமர்சித்ததுடன், பழைய அரசியல் கருத்துக்களை கலந்துரையாடுவதற்காக இந்த மாநாடு கூட்டப்படவில்லை என தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றும், அந்த நோக்கத்தை மனதில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மத்திய வங்கி ஆளுநரைப் போன்று குறுகிய அரசியல் நோக்கங்களுடன் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி பதில் கூறும் மாநாடாக மாநாடு இருக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பாக அமைச்சர் நிமல் சிறிபாலவினால் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இப்படி சர்வகட்சி மாநாட்டில் மத்திய வங்கி ஆளுநர் போன்ற குறுகிய அரசியல் பேசினால் நாங்களும் பதில் அளிப்போம், அவர் பதில் அளிப்பார். இறுதியாக இது வெற்றியுடன் முடிவடையும். குறுகிய அரசியல் பேசாமல் பிரச்சினைக்கு தீர்வு காண்போம்” என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

கொஸ்கொட தாரகவின் சகா கலுமல்லி கைது

‘அஸ்வெசும’திட்ட கொடுப்பனவு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

சமன் ரத்னபிரியவை பா.உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானி