உலகம்

சர்ச்சையில் பரிஸ் டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகம்

(UTV | கொழும்பு) – பரிஸ் டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் உறுப்பு தானம் செய்யும் மையத்தில் ஆயிரக்கணக்கான சிதைந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் தற்போது நீதிபதி தலைமையிலான விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பரிஸ் டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகம் தொடர்பில் உள்ளூர் பத்திரிகை ஒன்றே முதன் முதலில் குறித்த தகவலை வெளிக் கொண்டுவந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி வசதிக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மனித உடல்கள் தற்போது அருவருப்பான நிலைமைகளின் கீழ் உள்ளதாக அம்பலப்படுத்தியது.

மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட ஒரு செய்தி தொகுப்பில், ஆராய்ச்சி நோக்கங்களுக்காக உறுப்பு தானம் செய்யும் மையத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் சடலங்கள் அதன் அறைகளில் ஒவ்வொன்றின்மேல் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியது.

மேலும், நிர்வாண சடலங்கள் ஓரளவு சிதைந்த நிலையிலும், துண்டான தலை கேட்பாரற்று தரையில் கிடந்தது எனவும் அம்பலப்படுத்தினர்.

மட்டுமின்றி இதே விவகாரம் தொடர்பில் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு செய்தி தொகுப்பில், பரிஸ் நகரின் மத்திய பகுதியில் மாபெரும் கல்லறைத் தோட்டமாக விளங்குகிறது டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் உறுப்பு தானம் செய்யும் மையம் என குறிப்பிட்டிருந்தது.

மேலும், நல்ல நோக்கத்திற்காக தானமாக வழங்கப்பட்டுள்ள சடலங்கள் எலிகளுக்கு விருந்தாகும் கொடூரம் எனவும் சுட்டிக்காட்டியது.

இதைத் தொடர்ந்து டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் உறுப்பு தானம் செய்யும் மையத்திற்கு எதிராக சுமார் 80 புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

தற்போது நீண்ட பல ஆண்டுகளுக்கு பிறகு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

ஆப்கான் தற்கொலைப் படை தாக்குதலுக்கு IS பொறுப்பேற்பு

நியூசிலாந்து – ஓக்லாந்து நகரம் மீண்டும் முடக்கம்

அவுஸ்திரேலியா அனுமதி