உள்நாடு

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெயராமுடன் மஹிந்த தொடர்பு ???

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெயராமுடன் மஹிந்த தொடர்பு ???

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சிம்பாப்வே மத போதகர் ஊபர்ட் ஏஞ்சல் ஆகியோருடன் எவ்வித தொடர்பும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தாம் பிரதமராக பதவி வகித்த காலத்தில் ஒரு தடவை போதகர் ஜெரோமை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோமுடனான தொடர்பு குறித்து மகிந்த விளக்கம் போதகர் ஜெரோமின் கோரிக்கைக்கு அமைய தாம் சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதம் தொடர்பில் போதகர் ஜெரோம் வெளியிட்ட கருத்து கண்டிக்கத்தக்கது எனவும், மத குரோதத்திற்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோமுடனான தொடர்பு குறித்து மகிந்த விளக்கம் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான இனக்குரோத கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என தெரிவித்துள்ளார்.

மத விவகார அமைச்சராகவும் பிரதமராகவும் கடமையாற்றிய காலத்தில் பிரதமர்அலுவலகத்தில் வைத்து மதபோதகர் ஜெரோம் மற்றும் சிம்பாப்பே போதகர் ஏஞ்சல்ஸ் ஆகியோரை சந்தித்ததாகவும் அந்தப் புகைப்படங்களே தற்பொழுது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் மூன்று மணித்தியால மின்வெட்டு

சொய்சபுர துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; சந்தேக நபர் கைது

வங்கிகளுக்கு விஷேட விடுமுறை