அரசியல்உள்நாடு

சரத் வீரசேகர எம்பிக்கு எதிராக கண்டனப் போராட்டம் !

(UTV | கொழும்பு) –  கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டமானது இன்று (25.08.2023) காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்து இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பின் மற்றுமொரு தபால் நிலையத்திற்கு பூட்டு

நிரந்தர நியமனம் தரக்கோரி கொழும்பில் போராட்டம்!

இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி