கிசு கிசு

சரத் – பியூமி தொலைபேசியில் பேசியது உண்மை : அமைச்சர் ஒப்புக்கொண்டார்

(UTV | கொழும்பு) – பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவினால் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விருந்துபசாரத்தில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்ற பேரூந்தினை மீளவும் திரும்புமாறு எவ்வித அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது பொதுமக்கள் என்ற ரீதியில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை முன்னெடுக்குமாறு ஆலோசிக்கப்பட்டதாகவே அமைச்சின் ஊடகச் செயலாளர் சிந்தக லசந்த பெரேரா அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

2021.06.03 அன்று மாலை சட்டத்தரணி ஒருவர் தொலைபேசி ஊடாக அமைச்சரை தொடர்பு கொண்டு அவரது வாடிக்கையாளர் ஒருவரை பதுளையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவர்களுக்கு அடிப்படை தேவைகள் கூட வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்க, பின்னர் தொலைபேசியில் பெண்ணொருவர் தொடர்பு கொண்டு தான் பியூமி ஹங்ஸமாலி என்றும் தான் உள்ளிட்ட குழுவினை அணிந்துள்ள ஆடையுடனே பதுளை க்கு அழைத்துச் செல்வதாகவும் ஆடைகளை கொண்டு செல்ல வாய்ப்பு அளிக்குமாறும் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் அமைச்சர் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் மற்றும் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அறியப்படுத்தியதாகவும் பேரூந்தினை தலங்கம பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி அவர்களுக்கு தேவையான ஆடைகளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து கையளிக்குமாறு தெரிவித்த பின்னர் அவர்கள் பஸ்ஸர தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் அந்த பஸ்ஸினை திருப்பி கொழும்புக்கு அழைத்துவரும்படி தாம் உத்தரவிட்டதாக வெளியாகிவரும் செய்திகளை நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செய்தி “மவ்பிம” பத்திரிகையில் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிச்சைக்காரி வேசம் போட்ட தாய் – 16 வருடங்களின் பின்னர் மகனை கண்டுபிடித்தார்

பாத்திய ஜயகொடிக்கு கொரோனா

சூரியன் மறையாத அதிசய தீவு