சூடான செய்திகள் 1

சம்மாந்துறை திரையரங்கிற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

(UTVNEWS|COLOMBO) – அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, மேற்படி கைக்குண்டு சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பழைய திரையரங்கிற்கு அருகாமையில் காணியொன்றிலிருந்து இனந்தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டொன்றே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பானி புயல் இலங்கையை விட்டு நகரும் சாத்தியம்…

புதிய கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர்; இன்றாவது தீர்மானிக்குமா?

நைஜீரிய நாட்டவர் ஒருவர் கைது