உள்நாடு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக பிரபாசங்கர் நியமனம்!

பாறுக் ஷிஹான்

சுகாதார அமைச்சின் செயலாளரினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்ட டொக்டர் டீ.பிரபாசங்கர் இன்று (6) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அறிக்கை செய்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அம்பாரை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த டொக்டர் பிரபாசங்கர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் பணியாற்றியுள்ளதுடன், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரியாகவும் காத்தான்குடி கொரோனா வைத்தியசாலை பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 1,133 சந்தேகநபர்கள் கைது!

எல்ல மலைத்தொடரில் தீ பரவல்

editor

ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாமலின் பதில்