சூடான செய்திகள் 1

சம்மாந்துறையில் பதற்றம் ; இராணுவத்தினர் குவிப்பு

(UTVNEWS | COLOMBO) -சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இருவர் துப்பாக்கியைக் கொண்டு தன்னைச் சுட முற்பட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

காணி உரிமையாளர் குறித்த காணிக்கு இன்று காலை சென்ற நிலையில் அங்கு இருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டுள்ளனர்.

பினனர் துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை சுட முயன்று அச்சுறுத்தியதாகவும் தான் அதிலிருந்து தப்பியதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அருகிலுள்ள இராணுவத்தினரும் குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த இருவரும் அவ்விடத்திலிருநது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இதனைத் தொடர்ந்து பெருமளவு இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு குறித்த பிரதேசத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது எனினும் எந்தவித ஆயுதமும், நபர்களோ கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்கா இராஜாங்க செயலாளர் – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இடையே சந்திப்பு

வெளியாகவுள்ள 20 தொலைபேசி குரல் பதிவுகள்

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு