எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்மாந்துறை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நுகர்வோர் நீண்ட வரிசையில் இன்று (01) காலை முதல் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான 03வீத தள்ளுபடியை நிறுத்தியை அடுத்து பெட்ரோலிய விநியோகஸ்தர் சங்கம் இன்று முதல் புதிய எரிபொருள் விநியோகத்தை வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதனால் இன்று சம்மாந்துறையில் உள்ள மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசை காணப்பட்டது.
சம்மாந்துறையில் உள்ள சிபக்கோ, சினோபக், செல் ஆகியவற்றின் கீழ் செயற்படுகின்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே மக்கள் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
இதே வேளை, சம்மாந்துறை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் இல்லை என்று அறிவித்தல் போடப்பட்டிருந்தது.
நுகர்வோருக்கு ஏற்படும் எந்தவொரு சிரமத்திற்கும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகமே பொறுப்பாகும் என்றும், நெருக்கடிக்கு அவர்களின் முடிவுகளே காரணம் என்றும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்