விளையாட்டு

சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டி – இலங்கை அணிக்கான பயிற்சிப் போட்டி இன்று

(UDHAYAM, COLOMBO) – சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறும்.

சர்வதேச ஒருநாள் தரப்படுத்தலில் முதல் எட்டு இடங்களைப் பெற்றுள்ள அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளன. இதற்கு அமைய முதல் சுற்றில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்ளாதேஷ் ஆகிய அணிகள் ஏ-பிரிவின் கீழ் போட்டியிடவுள்ளன. பி-பிரிவின் கீழ் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா ஆகிய அணிக்ள போட்டியிடவுள்ளன.

முதலாவது போட்டி இங்கிலாந்து – பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறும். இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி அடுத்த மாதம் 3ஆம் திகதி தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறும். தொடரின் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 18ஆம் திகதி இடம்பெறும்.

எஞ்சலோ மத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்குச் சென்றுள்ளது. இவர்கள் இன்று முதல் பல பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

இந்திய பிறிமியர் லீக் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள லசீத் மாலிங்க இன்று நடைபெறும் இறுதிப் போட்டியின் பின்னர் இங்கிலாந்தில் உள்ள இலங்கை அணியுடன் சேர்ந்துகொள்ளவுள்ளார்.

Related posts

இந்திய லெஜென்ட்ஸ் : மற்றுமொரு வீரருக்கு கொரோனா

இலங்கை – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.

ரொனால்டோ மீளவும் களத்தில்