உள்நாடு

சம்பளம் வழங்க பணமில்லை : அரச கூட்டுத்தாபன காணியை விற்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –

கூட்டுத்தாபன ஊழியர்கள் மற்றும் தேசிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ஆணைய ஊழியர்களுக்கான சம்பளம், நிலுவையிலுள்ள சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியை வழங்குவதற்காக இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் பேலியகொட பகுதியிலுள்ள நிலத்தை விற்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

”குறித்த நிலப்பரப்பை ரூ.10 பில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக அமைச்சரவை அனுமதி கோரும் ஆவணங்கள் ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேலியகொட மீன் சந்தைக்கு அருகிலுள்ள அந்நிலப்பரப்பு 17 ஏக்கருக்கும் அதிகமானது” என இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவர் ரத்னசிறி களுபஹன தெரிவித்தார்.

தேசிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ஆணைய ஊழியர்களுக்கு கடந்த ஆம மாத சம்பளமாக ஒவ்வொருவருக்கும் ரூ. 7000.00 மாத்திரமே வழங்கப்பட்டது, அத்தோடு அவர்கள் அதற்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காராணமாக நிர்மாணப்பிரிவு பெரும் பின்னடைவை அடைந்தது. அத்தோடு பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் அதோடு இணைந்த பல பிரிவுகள் தங்களுடைய வருமானத்தையே இழந்தன. ஊதியங்களை வழங்குவதற்கான ஒரு வருமான வழிக்காக இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் பெரும் நெருக்கடியில் இருந்தது. எனவே சம்பளத்தின் ஒரு பகுதியே மே மாதம் வழங்கப்பட்டது. ஓய்வு பெறவுள்ள 1100 ஊழியர்களுக்கு மட்டுமே ரூ. 2600 மில்லியன் வழங்க வேண்டிய தேவையுள்ளது“ என ரத்னசிறி தெரிவித்தார்.

பாரியளவிலான பணமுறைகேடுகள் மற்றும் நல்லாட்சியில் மேற்கொள்ளப்பட்ட அதிகளவிலான ஆட்சேர்ப்பின் காராணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

இறக்குமதியாகிய இந்திய என்ஜின்களில் கோளாறு

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணமும் அதிகரிப்பு