உள்நாடு

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்? [VIDEO]

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் எரிவாயுவிற்கான விலை அதிகரித்துள்ளமை காரணமாக சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விலை அதிகரிப்பு செய்யப்படாமல் இருப்பதன் காரணமாக எரிவாயு நிறுவனங்கள் நட்டத்தினை எதிர்நோக்கி வருவதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், சமையல் எரிவாயுவின் விலையானது எந்தவொரு காரணத்திற்காகவும் அதிகரிப்பு செய்யப்படமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

உண்மையான சுதந்திரம் மலர ஓரணியில் திரள்வோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

அதிகரிக்கப் போகும் குடிநீர் கட்டணம்

காப்பாற்றப்பட்ட பின்னர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

editor