உள்நாடு

சமையல் எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(18) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு 1,20 000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தபால் மூலம் இலங்கைக்கு ஜஸ்

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

பொதுமக்கள் தாம் விரும்பும் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது