சூடான செய்திகள் 1

சமையல் எரிவாயு, பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV|COLOMBO)-சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று பிற்பகல் நடைபெறும் வாழ்க்கைச் செலவுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வாழ்க்கைச் செலவு குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

கடந்த வாரத்தில் நடைபெற்ற வாழக்கை செலவுக்கூட்டத்தில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலையை 270 ரூபாவால் அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனம் அரசாங்கத்திடம கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் 175 ரூபாவால் சமையல் எரிவாயுவை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கமுடியும் என கடந்த வாரத்தில் நடைபெற்ற வாழக்கை செலவுக்கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது.

எனினும் இது குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.

இந்நிலையில் இன்று கூடவுள்ள வாழ்க்கைச் செலவுக்குழு கூட்டத்தில், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் குறித்தும் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசியல் கட்சிகளது செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இடையே சந்திப்பு

களுத்துறை ரைகம,கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வலயம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி

நியூயோர்க் டைம்ஸ் செய்தி தொடர்பான விவாதம் இன்று