உள்நாடு

சமூர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தால் சமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா முன்கூட்டிய கொடுப்பனவு தொகையை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்கவுள்ளதாக சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த கொடுப்பனவு தொகையை இரண்டு கட்டங்களாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

எனவே முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதற்காக 20,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தொகைக்காக எந்தவித வட்டியும் அறவிடப்படாது எனவும் பணத்தை மீள் செலுத்துவதற்கான காலம் 18 மாதங்கள் எனவும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் உட்பட 9 பேர் காயம்

இலங்கையில் சிலருக்கு கொரோனா வைரஸ்

ஹட்டனில் மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளே தனிமைப்படுத்தல்