உள்நாடு

சமூர்த்தி அதிகாரிகளும் அரசுக்கு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – சம்பளம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை முற்போக்கு சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முறையான பதவி உயர்வு வழங்காமை, வருடாந்த இடம்மாற்றம் வழங்கப்படாமை, தொலைபேசி கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் அலுவலக கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட செயற்பாடுகளால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டபிள்யு.எம் ஜோதிரட்ன தெரிவித்துள்ளார்.

சம்பளம் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை தமது சங்கம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

எனினும், அதற்கான தீர்வு இதுவரையில் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலை தொடருமாயின் தாம் பணிப்புறக்கணிப்புக்கு செல்ல நேரிடும் என அகில இலங்கை முற்போக்கு சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டபிள்யு.எம் ஜோதிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு

இரவு நேரப் பயணத்தடை : புதிய அறிவிப்பு

கேரள கஞ்சா கடத்திய நால்வர் கைது