கேளிக்கை

சமூக வலைத்தளத்தில் தற்போது டிரெண்டாகி வரும் 10 இயர் சேலஞ்ச்

(UTV|INDIA)-சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சேலஞ்ச் என்ற பெயரில் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்கள். ஐஸ் பக்கெட் சேலஞ்ச், தோசை சேலஞ்ச், சமீபத்தில் கிகி சேலஞ்ச் என்று சமூக வலைத்தளத்தில் பிரபலமானது.

தற்போது 10 இயர் சேலஞ்ச் ஒன்று டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு பகிர்ந்து வருகிறார்கள். மேலும், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் இந்த சேலஞ்ச்-யை செய்ய சொல்லி பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த சேலஞ்ச் சினிமா பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் கயல் சந்திரன், பிரேம்ஜி, காமெடி நடிகர் சதீஷ், பாடகர் கிரிஷ் உள்ளிட்ட பலர் இதையேற்று தங்களுடைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

‘மாஸ்டர்’ மகாராஷ்டிராவில் படுதோல்வி

பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு

இந்தியன் -2வில் கமலுடன் இணையும் துல்கர்