உள்நாடு

சமூக ஊடக தணிக்கை – மஹிந்த கருத்து.

(UTV | கொழும்பு) –

சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் மீது கொண்டு வரப்படவுள்ள சட்டமூலம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது என்று கூறிய அவர், விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்றும், தன்னை பற்றி எதனை கூறினாலும், தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, அண்மையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு – மட்டக்களப்பு மக்கள் கவலை

editor

கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவில் மாற்றம்!

முல்லைத்தீவில் ஆயுதங்கள், தங்கம் தேடிய அகழ்வுப் பணி இரண்டாவது நாளாக முன்னெடுப்பு!