சூடான செய்திகள் 1

சமாதானம் நிலவும் நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 2 ஆவது இடம்

(UTV|COLOMBO)-உலக அமைதிச் சுட்டெண் 2018 இன் படி தெற்காசியாவில் சமாதானம் நிலவும் நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்துக்கு தெரிவாகியுள்ளது.

முதலாவது இடம் பூடானுக்கு கிடைத்துள்ளது. 163 உலக நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் உலக நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 67 ஆவது இடம் கிடைக்கப் பெற்றுள்ளது.

உலக அமைதிச் சுட்டெண் என்பது நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அமைதித்தன்மையை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவீடாகும். இது பொருளாதார அமைதி நிறுவனத்தால் (Institute for Economics and Peace) உருவாக்கப்பட்டு, உலகளாவிய அமைதிக்கான வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அளவீடாகும்.

Think tank என்ற அமைப்பு இந்த அளவீட்டை கண்டு பிடிப்பதற்கான தரவுகளை சேகரித்தலிலும், Economist Intelligence Unit என்ற நிறுவனம் அவற்றை ஒழுங்குபடுத்தி ஆவணப்படுத்துவதிலும் உதவுகின்றன. இந்தப் பட்டியல் முதன் முதலாக மே 2007 இல் வெளியானது. பின்னர் அதைத் தொடர்ந்து, ஜுன் 2008 இலும், அண்மையில் ஜுன் 2010 இலும் வெளியிடப்பட்டது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடைகளும் இல்லை