வகைப்படுத்தப்படாத

சமாதானத்தின் ஊடாகவே இந்த நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க முடியும்

(UTV|COLOMBO)-சமாதானத்தின் குமாரர் என அழைக்கப்படும் இயேசுநாதரின் பிறப்பு நிகழ்ந்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் நாம் சமாதானத்தின் ஊடாகவே இந்த நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க முடியும்.

 உங்கள் அனைவருக்கும் எழில்மிகு மற்றும் அர்த்தம் பொருந்திய நத்தார் தினமாக அமைய வேண்டுமென  வாழ்த்துகிறேன்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்து செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்து செய்தி பின்வருமாறு:
சமாதானம் மற்றும் அன்பின் சுபசெய்தியுடன் தேவ புத்திரர் இயேசுநாதர் பிறந்தமையைக் கொண்டாடும் நத்தார் தினம் கிறிஸ்தவ மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஓர் சமய வைபவமாகும். தற்போது அது கிறிஸ்தவர்கள் மாத்திரமன்றி இன, மத பேதமின்றி பெரும்பாலான உலக மக்கள் கொண்டாடும் கலாசார நிகழ்வாகவும் மாறியுள்ளது.
ரோம வல்லரசின் சமூக, பொருளாதார முறைமையினுள் மக்கள் இன்னல்களை அனுபவித்துக் கொண்;டிருந்த காலப்பகுதியில் இயேசுநாதர் மாட்டுத் தொட்டிலில், ஏழைப் பெற்றோருக்கு மகனாப் பிறக்கிறார். அவர் பௌதீக, மானசீக, ஆன்மீக வறுமையிலிருந்து, அடக்குமுறையிலிருந்து மீள்வதற்காக அன்பு, ஆதரவு, கருணை மிகுந்த சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதற்காக தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்தார்.
இன, மத பேதங்களைத் தாண்டிய, சமாதானம், நல்லிணக்கம் மிகுந்த, நற்பண்புகள் நிறைந்த சிறந்த சூழலொன்றையும் சட்டம், சமாதானம், நீதி என்பன ஆதிக்கம் செலுத்தும் சிறப்பானதோர் தேசத்தையுமே இன்று எமது சமூகமும் வேண்டி நிற்கிறது.
நல்ல மனிதன் தனது உள்ளத்தில் மறைத்து வைத்துள்ள நல்ல அம்சங்களையும், கெட்ட மனிதன் தனது உள்ளத்தில் மறைத்து வைத்துள்ள கெட்ட அம்சங்களையும் வெளிப்படுத்துவதாக புனித பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நல்ல அம்சங்களினால் நமது உள்ளங்களை நிரப்பி, சிறந்த மனிதர்களாக சமூகத்தை வளப்படுத்;துவதனையே நாம் அனைவரும் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
சமாதானத்தின் குமாரர் என அழைக்கப்படும் இயேசுநாதரின் பிறப்பு நிகழ்ந்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் நாம் சமாதானத்தின் ஊடாகவே இந்த நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க முடியும். உங்கள் அனைவருக்கும் எழில்மிகு மற்றும் அர்த்தம் பொருந்திய நத்தார் தினமாக அமைய வேண்டுமென என வாழ்த்துகிறேன்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இந்திய பிரதமர் தலதா மாளிகையில் வழிபாடு

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்

Easter Sunday attacks: Rs 265 million in compensation paid so far