உள்நாடு

சமபோஷ உணவு உற்பத்திகளுக்கு தடை

(UTV | கொழும்பு) –    சமபோஷ நிறுவனத்தின் உணவுத்தயாரிப்புக்களை விநியோகம் மற்றும் விற்பனை செய்வது தொடர்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்களில் அஃப்லாடாக்சின் அதிகமாக அடங்கியிருப்பதால் காரணமாக குறித்த தயாரிப்புகளுக்கு மொறவக்க நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

மொறவக்க பிரதேசத்துக்குட்பட்ட இப்பொருளின் விற்பனையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யுமாறும், தற்போது சந்தையில் உள்ள பொருட்களின் இருப்புகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த உற்பத்திப்பொருட்களை பரிசோதித்து அஃப்லாடோக்சின் அளவு அதிகமாக இருந்ததை கண்டறிந்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார்

கொவிட் – 19 நிதியத்திற்கு 891 மில்லியன் ரூபாய் நன்கொடை

ரணிலுக்கு அநுரவோடு டீல் இருந்தாலும் எனது டீல் மக்களுடனே இருக்கிறது – சஜித்

editor