உள்நாடு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று(30) முதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 90,000 மெட்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தைக் கடந்த தினத்தில் வந்தடைந்தது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன, துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்ட மசகு எண்ணெய் இறக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

சுமார் ஒரு மாதத்திற்கும் அதிக காலம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான மசகு எண்ணெய் கொழும்பு துறை முகத்திற்குக் கொண்டு வரப்பட்டு தற்போது இறக்கப்படுகின்றது.

அத்துடன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்ந்து செயற்படுமாயின் மின்சார உற்பத்திக்குத் தேவையான உலை எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை விநியோகிக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு

மேலும் 204 பேர் சிக்கினர்

மேலும் ஒரு தொகுதியினர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு [PHOTOS]