உள்நாடு

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் பூட்டு

(UTV | கொழும்பு) –  சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இன்று (03) முதல் மீளவும் மூடப்படவுள்ளது.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினால் இவ்வாறு சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி மூடப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 22 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

இம்மாதம் இறுதி வாரத்தில் எரிபொருள் தாங்கி ஒன்று இலங்கைக்கு வரவுள்ளதால் அதன் பின்னர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

14 மாதங்களில் 157% அதிகரித்துள்ள மின் கட்டணம்!

பீசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பு

கரையோர பாதை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு