அரசியல்உள்நாடு

சபாநாயகர் பதவி விலகியது பாராட்டத்தக்கது – நாமல் ராஜபக்ஷ

சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல தனது பதவியை இராஜிநாமா செய்தமை பாராட்டத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அப்படியிருந்தும், மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்ட கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவில்,

“ஊழலற்ற தூய்மையான பாராளுமன்றத்தை உருவாக்குவதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வை எனவும் இதன் காரணமாக அரச அதிகாரிகளின் தகுதிகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்” எனவும் நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.

Related posts

தொடர்ந்தும் மண்சரிவு

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையை புறக்கணித்து, ரணில் முன்னெடுத்த IMF இணக்கப்பாட்டையே முன்னெடுத்து வருகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

லங்கா ஐஓசியின் அறிவித்தல்