உள்நாடு

சபாநாயகரின் விசேட கோரிக்கை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உரிய விதிகளுக்கு அமைவாக பாராளுமன்றத்தினால் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய வாக்கெடுப்பில் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அதனை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1981 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் பிரகாரம் அனைத்து வழிகாட்டல்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இரகசிய வாக்கெடுப்பின் தேர்தல் அதிகாரியாக செயற்படும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

Related posts

நான்கு நாடுகளுக்கான தபால் பொதி சேவைகள் இடை நிறுத்தம்

பூஸ்ஸ சிறைச்சாலை உண்ணாவிரதம் – இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

பால் மாவின் விலை உயர்வு!