கேளிக்கை

சன்னி லியோன் தமிழில் அறிமுகமாகும் ‘Oh My Ghost’ [VIDEO]

(UTV | சென்னை) – ஓ மை கோஸ்ட் டீசரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் சன்னி லியோனின் வழக்கமான கிளாமர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஹாட்டான ராணியாக சன்னி லியோன் கவனம் ஈர்க்கிறார்.

பிரபல நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சன்னி லியோன் அறிமுகம் ஆகிறார்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். பல படங்களில் இடம்பெறும் சிங்கிள் பாடலுக்கு சன்னி லியோன் ஆட்டம்போட்டு ரசிர்களை ஈர்த்திருக்கிறார்.

போல்டான படுக்கையறை காட்சிகள், கிளாமர் பாடல்கள் என சன்னி லியோன் இடம் பெறும் படங்கள் பரபரப்பாகவே இருக்கும். இந்நிலையில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி போட்டுள்ளார் சன்னி லியோன்.

இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை சிந்தனை செய் படத்தை இயக்கிய ஆர்.யுவன் இயக்கியுள்ளார். நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

Related posts

800 : பின்வாங்கத் தயார் இல்லை

ரஜினிக்காக இளமையாகிய திரிஷா?

ஐஸ்வர்யா தனுஷ் : கொவிட் தொற்று