கேளிக்கை

சன்னி லியோனுக்கு மெழுகு சிலை

(UTV|INDIA)-பிரபல ஆபாச பட நடிகை சன்னிலியோன். இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

வீரமாதேவி என்ற சரித்திர படத்திலும் இப்போது நடிக்கிறார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவரது வாழ்க்கை கதை தொடராக தயாராகி உள்ளது. சன்னிலியோன் இந்தி படங்களில் நடிப்பதற்கு அங்குள்ள கவர்ச்சி நடிகைகள் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகிறார்கள்.

கவர்ச்சியாக நடித்து வழக்குகளிலும் சிக்கி உள்ளார். இந்த நிலையில் சன்னிலியோனுக்கு மெழுகு சிலை தயாராகி உள்ளது. டெல்லியில் உள்ள மேடம் துஷாத் மியூசியத்தில் இந்த சிலையை வைக்கிறார்கள். அங்கு அமிதாப்பச்சன், ஸ்ரீதேவி உள்பட முன்னணி நடிகர்–நடிகைகளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டு உள்ளது.

தனது மெழுகு சிலையை சன்னிலியோன் திறந்து வைத்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து சன்னிலியோன் கூறும்போது, ‘‘எனக்கு மெழுகு சிலை வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த சிலையை பார்த்ததும் வியப்பு ஏற்பட்டது. இந்த சிலையை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் உருவாக்க நிறைய பேர் பல நாட்கள் உழைத்து உள்ளனர். அவர்களை நான் பாராட்டுகிறேன். எனக்கு மகிழ்ச்சியான உணர்வை இந்த சிலை ஏற்படுத்தி உள்ளது. இதை கவுரவமாக கருதுகிறேன்’’ என்றார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் -ரஜினிகாந்த்

ரசிகரின் கேள்விக்கு இரட்டை அர்த்தத்தில் பதிலளித்த நடிகை கஸ்தூரி..!

(VIDEO)-அட்டகாசமாக வெளியானது 2.0 படத்தின் டீசர்