உள்நாடு

சனியன்று நுகேகொடையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை (6) நுகேகொடையில் பொது பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.

அரசாங்க அடக்குமுறை, அவசரகால நிலை மற்றும் பல காரணிகளுக்கு எதிராக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கை மையமாக வைத்து இப்பேரணி நடைபெறவுள்ளது.

தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம், சிவில் அமைப்புகள் மற்றும் பல தரப்பினரும் இந்த பேரணியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related posts

பட்ஜட்டுக்கு முன் அமைச்சரவையில் மாற்றம்: களமிறங்கும் பசில்

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்

மட்டக்களப்பிலும் செயலிழந்த புற்றுநோய் சிகிச்சை இயந்திரம்!