உள்நாடு

சனத் நிஷாந்த மரணம் குறித்து சிஐடி விசாரணை

(UTV | கொழும்பு) –   முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, இந்த விபத்து இடம்பெற்ற போது, அந்த வாகனத்திற்கு முன்னால் பயணித்த கொள்கலன் வாகனத்தின் சாரதி நாரஹேன்பிட்டியிலுள்ள குறித்த விசாரணைப் பிரிவுக்குச் சென்று 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிக்கு மரணத்தை ஏற்படுத்திய விபத்து குறித்து சந்தேகம் உள்ளதாகவும் அது தொடர்பான முறையான விசாரணை நடத்த வேண்டுமெனவும் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்திருந்தமை குறிப்பிடத்த்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானம்

editor

சமுர்த்தி வங்கிகளில் ஊழல் மோசடி – கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்.

ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகத்தை இலங்கை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது – ஜனாதிபதி ரணில்

editor