உள்நாடு

சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு தெளிவாகிறது

(UTV | கொழும்பு) – மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு காரணமாக தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தற்போது நாளாந்த தேவையில் 50 சதவீதத்தையே பூர்த்தி செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே தற்போது சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பெட்ரோல் கொள்கலன் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும், அதற்கான கட்டணத்தை செலுத்தி இன்று சந்தைக்கு விடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் டீசல் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாகவும், ஆனால் அதற்கு செலுத்த வேண்டிய 35 மில்லியன் டொலர்களை இதுவரை தயார் செய்யாததால் தரையிறங்கும் திகதியை நிர்ணயிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் வினவிய போதே எரிசக்தி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாததால் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்வதனை காணக்கூடியதாக உள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது!

பிரபல சிங்கள நடிகை தமிதா கைது

கோப் குழு முன் ஆஜராகும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள்!