உள்நாடு

சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களை நாடும் பொலிஸார்

(UTV | கொழும்பு) –  சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களை நாடும் பொலிஸார்

கடந்த மே மாதம் 20 ஆம் பொரளை லெஸ்லி ரணகல மாவத்தைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொரளை லெஸ்லி ரணகல மாவத்தைக்கு அருகில் 53 வயதுடைய நபர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வசிப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு (CCD) மேற்கொண்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தேடப்பட்டு வரும் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8591733, 071-8591735, அல்லது 071-8596503 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் நிறைவு திகதி அறிவிப்பு

கின்னஸ் சாதனை படைத்தனர் இலங்கை மாணவர்கள்

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் 1482 ஆக அதிகரிப்பு

editor