கிசு கிசு

சந்தேகத்துகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவும்

(UTV|COLOMBO)-பணம் மீளப்​பெறும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களுக்கு அருகில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கமராவுக்கு பதிவாகாத வகையில், முகத்தை மறைத்த வண்ணம் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் குறித்து, அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்துக்கு முறையிடுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

ATM, கடனட்டை தரவுகளைச் சேகரித்து, போலி அட்டைகளைத் தயாரித்து பணம் மோசடி செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மூவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமைத் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடனட்டை பொருத்தியிருக்கும் இடங்களில் சில உபகரணங்களைப் பொருத்தி அதன் மூலம் கடனட்டைகளின் தகவல்களைச் சேகரித்து அதனை தமது அலைபேசிகளில் தரவேற்றிக்கொண்டு, அதனைப் பயன்படுத்தி போலி கடனட்டைகள் தயாரித்து பணக் ​கொள்ளையில் ஈடுபட்டமைத் தொடர்பில் குற்றப்புலனாய்வு  பிரிவினர்  முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

இதற்கமைய ஜனவரி மாதம் 20ஆம் திகதி கோட்டை செத்தம் வீதியில் வைத்து சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டார். 21ஆம் திகதி வௌ்ளவத்தைப் பகுதியில் வைத்து மற்றுமொரு சீனப் பிரஜையும், பெப்ரவரி 3ஆம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் வைத்து ருமேனியா நாட்டுப் பிரஜை ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்களிடமிருந்து போலி கடனட்டைகள் 200, 12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், தகவல்களைச் சேமிக்கும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் சீன நாட்டைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களும் இன்றைய  தினம் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இவர்களை 13ஆம் திகதி வரையும், ருமேனியப் பிரஜையை பாணந்துறை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து  18ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

இணையதளங்களுக்கு புதிய கட்டுப்பாடு – 3 ஆண்டு சிறை, 10 லட்சம் அபராதம்!

இலங்கையினை ஆளும் இந்தியா?

இதயம் உடலுக்கு வெளியே இருந்து துடித்தப்படி பிறந்த குழந்தை- VIDEO