உள்நாடு

சதோசவுக்கு மதுபான உரிமம்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் 300 சதொச விற்பனை கூடகங்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்க கலால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, கலால் அறிவிப்பு பிரிவு 902க்கு உட்பட்ட அனைத்து சதொச விற்பனை நிலையங்களுக்கு உடனடியாக மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் மதுபான அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்த சில சதொச நிறுவனங்கள் உரிய தகைமைகளை பூர்த்தி செய்யாததாலும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாகவும் , இந்த உரிமங்கள் வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்யாத சில சதொச விற்பனை நிலையங்களுக்கு இந்த அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உள்ளக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

உரிய அனுமதிப்பத்திரங்களை அங்கீகரித்ததன் பின்னர், சதொச நிறுவனங்களில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் கலால் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related posts

பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மாகாண பயண கட்டுப்பாடு 31 ஆம் திகதி நீக்கம்

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை