சூடான செய்திகள் 1வணிகம்

சதொச ஊடாக மத்திய கிழக்கிலிருந்து பேரீச்சம்பழ இறக்குமதி

(UTV|COLOMBO)-சதொச ஊடாக மத்திய கிழக்கிலிருந்து பேரீச்சம்பழத்தை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரமழான் நோன்பு காலப்பகுதியை முன்னிட்டு தேவையானளவு பேரீச்சம்பழத்தை விநியோக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த வருடத்தில் சவூதி அரேபியா இலவசமாக 150 தொன் பேரீச்சம்பழத்தை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டது.

இதற்கமைவாக சதொச ஊடாக மேலும் 150 தொன் பேரீச்சம் பழத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் இம்முறை மத்தியகிழக்கு நாடுகளில் பேரீச்சம்பழத்தின் அறுவடை குறைவடைந்தமை காரணமாக இலவசமாக கிடைக்கும் பேரீச்சம்பழம் குறைவடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக சதொச ஊடாக இந்த வருடத்தில் போதுமான அளவு பேரீச்சம்பழத்தை மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சதொச தலைவருக்கும் நிதியமைச்சின் அதிகாரிகாளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நீர் கட்டணம் அதிகரிக்கும் நிலை

60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்குமாறு அறிவிப்பு

மட்டக்களப்பு ரயில் சேவை வழமை நிலைமைக்கு