சூடான செய்திகள் 1

சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை எடுத்து வர முற்பட்ட நபர் விமான நிலையத்தில் கைது

(UTV|COLOMBO) சட்ட விரோதமான முறையில் இரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியை கொண்ட தங்க ஆபரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க அதிகாரிகளால் இன்று காலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

அவரிடமிருந்து 4 கிலோ 43 கிராம் தங்க வளையல்கள், 423 கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் பெறுமதி இரண்டு கோடியே 15 லட்சம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

காற்றுடன் கூடிய காலநிலை

பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை

50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

editor