உள்நாடுசூடான செய்திகள் 1

சட்ட மா அதிபரின் சேவைக்காலத்தை நீடிக்கும் ஜனாதிபதி!

சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விசேட அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், அவருக்கு சேவை நீடிப்பை கோரி ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசை அரசியலமைப்பு சபை நிராகரித்திருந்தது.

இந்நிலையில், இன்று விசேட கூட்டமொன்றையும் அரசியல் அரசியல் அமைப்பு நடத்தவுள்ளது.

இந்த பின்னணியிலேயே அரசியலமைப்பு சபையின் முடிவை புறந்தள்ளி ஜனாதிபதி ரணில், சட்ட மா அதிபரின் சேவைக்காலத்தை நீடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக அரசியலமைப்பு சபைக்கு 8 பக்கங்களை கொண்ட காட்டமான கடிதமொன்றை சில தினங்களுக்கு முன்னர் அனுப்பிய ஜனாதிபதி ரணில், அரசியலமைப்புச் சபையின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுவர் மீதான துன்புறுத்தல் அதிகரிப்பு

நாடு திரும்புவோரில் தொற்றில்லாதவர்கள் சமூகத்துக்குள் நுழைய அனுமதி

போதைபொருட்களுடன் நால்வர் கைது